ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
வரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகள்
வரும் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகள் எப்படி மேற்கொள்ளப்படும் என ஆய்வு செய்திடும் அமைப்புகள், 2014 ஆம் ஆண்டு வாக்கில், இன்டர்நெட் பயன்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் வரும் என அறிவித்துள்ளனர். டெஸ்க்டாப் வழியாக இன்டர்நெட் இணைப்பு பெற்று வரும் பழக்கம் மறைந்து, அனைவரும் மொபைல் போன் வழியாகவே இன்டர்நெட் தேடலை மேற்கொள்வார்கள். இது ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மிக வேகமாக உயரும். ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகும். தற்போது 16 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இது உலக அளவில் அடுத்த ஆண்டுகளில் 90 கோடியாக உயரும். ஆனால், இது வெளியே பரவலாகத் தெரியும் அளவிற்கு இருக்காது. ஏனென்றால், உலகின் பல நாடுகளில், ஸ்மார்ட் போன் சாதாரண மக்களின் எட்டாக் கனியாகவே உள்ளது. பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்களில், பாதிக்கும் குறைவாகவே ஸ்மார்ட் போன் பயன்பாடு இருக்கும். கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை, டெஸ்க்டாப் முழுக்க மறையத் தொடங்கும். டேப்ளட் பிசிக்கள் இதன் இடத்தைப் பிடிக்கும். பெர்சனல் கம்ப்யூட்டர் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் அதன் இடத்தை இழக்கும். இணைய இணைப்புக்கான நெட்வொர்க்குகளில் ஏற்படும் டிஜிட்டல் போக்கு வரத்து சிக்கல் இன்னும் அதிகமாகும். இன்னும் இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் வர இருக்கும் 4ஜி தொழில் நுட்பமும் இதனை மாற்ற முடியாது. ஏனென்றால், 2020 ஆம் ஆண்டு வாக்கில் 5000 கோடி மொபைல் இணைப்புகளை டிஜிட்டல் உலகம் சமாளிக்க வேண்டியதிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment