இறைவனின் அரு‌ளி‌ள் அசை‌க்க முடியாத ந‌ம்‌பி‌க்கை வை - அன்னை

பரமன் உலகத்தைக் காப்பாற்றும் பொருட்டு தனது அருளை உலகினுள் அனுப்பியிருக்கிறான்.

இவைறவனின் அருளுக்காகவே வேண்டிக்கொள்ள வேண்டும் - நீதி வெளிப்படுவதாக இருந்தால் அதன் முன் நிற்கக் கூடியவர் வெகு சிலராகவே இருப்பர்.


அவளுடைய மத்தியஸ்தம் மூலம் இறைவனை நோக்கிய உண்மையான, நம்பிக்கையோடு கூடிய ஆர்வத்தின் ஒவ்வொரு இயக்கமும் அருள் கீழே இறங்கிவந்து தலையிடச் செய்கிறது.

பிரபு, எவனால் உமது முன் நின்று, முழு உள்ளத்தோடு "நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை" என்று சொல்லமுடியும்? ஒவ்வொரு நாளும் எத்தனை தடவைகள் உமது வேலைக்கு தீங்கிழைக்கும் தவறுகளைச் செய்கிறோம், எப்பொழுதும் உமது அருள் வந்து அவற்றைத் துடைத்தழிக்கிறது! உமது அருளின் தலையீடு இல்லாவிட்டால் விஸ்வ நீதியின் சட்டத்தின் இரக்கமற்ற கத்தியின் கீழ் அடிக்கடி வராதிருக்கக் கூடியவன் யார்?

இறைவனின் அருளே, உமது நன்மை எல்லையற்றது. நாங்கள் நன்றியுடன் உம் முன் வணங்கி நிற்கின்றோம்.

அன்னையே, இறைவனின் அருளின் விளக்கம் என்ன? பராசக்தி அன்னை அவளுடைய அருளை அழைக்கக் கூடியவர்களுக்கு அதை வழங்க எப்பொழுதும் தயாராக இருக்கிறாள் அல்லவா?

ஆம்.

கடவுளை நாடுகிறவர்களிலும் மிகப் பெரும்பாலோரால் அதை கீழே அழைக்க முடியாது என்பது உண்மையல்லவா? இருப்பினும், ஒரு குருவோ அல்லது அவதாரமோ அதைக் கீழே கொண்டு வந்தபின் அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும் அல்லவா?

ஆம்.

ஆகவே இறைவனின் அருள் புவி உணர்வில் நிலை நாட்டடப்பட்டபோது அது அதிக சிறப்பாக வேலை செய்யும் என்று முடிவு செய்யலாம். அதை இங்கே நிரந்தரமாக நிலை நாட்டுவதுதான் உமது முயற்சியின் நோக்கமா?

ஆம்.

அருள்கூர்ந்து அதன் தத்துவம் முழுவதையும் எனக்கு விளக்கவும்.

இறைவனின் அருளை வார்த்தைகளைக் கொண்டும் மனத்தின் முறையிலும் விளக்க முடியாது.

இறைவனின் அருள் ஒன்றே சாந்தி, மகிழ்ச்சி, ஆற்றல், ஒளி, ஞானம், உயர்ந்த இன்பம், அன்பு ஆகியவற்றை அவற்றின் சாரத்திலும் உண்மையிலும் தரமுடியும்.

இறைவனின் அருளின் முன்னால் தகுதியுடைவர் யார்? தகுதி இல்லாதவர் யார்? எல்லோரும் ஒரே அன்னையின் குழந்தைகளே. அவளுடைய அன்பு அவர்கள் எல்லோருக்கும் சமமாகக் கொடுக்கப்படுகிறது.

ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் இயல்பிற்கு ஏற்றபடியும் ஏற்புத்திறனுக்கு ஏற்றபடியும் அவள் கொடுக்கிறாள்.

இப்படிச் சொல் - "நான் அவனுடைய அருளைப் பெற்றிருக்கிறேன். நாள் அதற்குத் தகுதியுடைவனாக இருக்க வேண்டும்", அப்பொழுது எல்லாம் சரியாக நடக்கும்.

நாம் எதையும் மறைத்து வைக்காமல் நம்மை இறைவனுக்குக் கொடுப்போம், அப்பொழுது மிகச் சிறந்த முறையில் இறைவனின் அருளைப் பெறலாம்.

அருள் வேறுபாடின்றி எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொருவனும் அவனவனுடைய நேர்மைக்குத் தக்கபடி பெற்றுக்கொள்கிறான். அது புறச்சந்தர்ப்பங்களைச் சார்ந்து இருக்கவில்லை. உண்மையான ஆர்வத்தையும் திறந்திருப்பதையும் சார்ந்திருக்கிறது.

கிடைத்த அருளைச் சரியாகப் பயன்படுத்துதல். அதைக் கோணலாக்கக் கூடாது, குறைக்கக்கூடாது, மிகைப்படுத்தக் கூடாது - தெளிவான நேர்மை இருக்க வேண்டும்.

இறைவனின் அருளின் அழைப்பு, இரைச்சல் இருக்காது, ஆனால் விடாப்பிடியாக இருக்கும்.

நன்றி : வைகறை
ஸ்ரீ அரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு

No comments: