Pages

கண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவசியம்.


லக வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க உதவுபவை கண்கள். கண்களின் செயல்பாடு அதிசயமானது. நமது வாழ்வில் 82 சதவீத அனுபவங்கள் கண் பார்வையின் மூலமாக கிடைப்ப தாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை கண்கள்.
இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது. எனவே கண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவசியம்.

ண்ணில் `அக்வஸ்' என்ற நிறமற்ற திரவம் உள்ளது. இது சீராக உற்பத்தியாகி வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கண்ணில் அழுத்தம் ஏற்படும். இது கிளகோமா வியாதி எனப்படுகிறது. இதனால் பார்வை நரம்புகள் பாதிக்கப்படுவதால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படலாம். எனவே இதை `சைலன்ட் விஷன் ஸ்டீலர்' என்கிறார்கள். பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சரி செய்யலாம். பாதிப்பை உணர்ந்தவர்கள் நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டாக வேண்டும்.
பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை (மையோபியா- மைனஸ் பவர்). தூரப்பார்வை (ஹைபரோபியா -பிளஸ் பவர்) என இரு வகைப்படும். கிட்டப் பார்வையில் கண்ணின் அளவு பெரிதாக இருக்கும். தூரப்பார்வையில் கண்ணின் அளவு சிறியதாக இருக்கும். இவை இரண்டும் அல்லாமல் கருவிழியின் வளைவான அமைப்பில் மாறுபாடு இருந்தால் `அஸ்டிக்மாடிஸம்' பாதிப்பு எனப்படுகிறது. இந்த குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸ்களோ அணியலாம். அறுவைச் சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.
ண்ணுக்குள் எப்போதும் கண்ணீர் உற்பத்தியாகிக் கொண்டிருக் கிறது. கண்ணீரின்றி கண் வறண்டால் பிரச்சினை. மின்விசிறியின் கீழ் நீண்ட நேரம் இருந்தால் இந்த பாதிப்பு வரலாம். கண்ணில் சதை வளர்வதை டெரிஜியம் என்பார்கள். இதை அறுவைச் சிகிச்சை மூலம் சரிப்படுத்தலாம். கண்ணில் தூசி விழுந்தால் கண்ணை கசக்கக்கூடாது. கண்ணைக்கசக்கினால் அந்த அழுத்தத்தால் கண்களில் வெள்ளைத் தழும்பு ஏற்பட்டு பார்வை போகும் ஆபத்தும் இருக்கிறது. எனவே கண்ணில் தூசி விழுந்தால் தண்ணீர் விட்டு கழுவுங்கள். தொடர்ந்து கண்ணில் நெருடல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
நம் நாட்டில் பார்வைக் குறைவுக்கு மிகமுக்கிய காரணம் கண்புரை எனப்படும் காட்ராக்ட் வியாதி. கண்களில் உள்ள பார்வை லென்ஸ்கள் பாதிக்கப்பட்டால் `காட்ராக்ட்' எனப்படுகிறது. இந்த கண்புரைப் படலத்தை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதற்கு `பேகோ எமல்சிபிகேசன்' என்ற நவீன அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறை இருக்கிறது. இதில் கண் புரையை சிறு துவாரம் வழியாக கரைத்துவிட்டு அதே வழியாக லென்சை பொருத்தி விடுவார்கள். 10 நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டி.வி. பார்க்கலாம், கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம்.
கண்ணில் குச்சி, கூரான பொருள் குத்தினாலோ, வேதிப்பொருட் கள் பட்டுவிட்டாலோ பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவரை அணுக வேண்டும். கண்ணில் கட்டி வந்துவிட்டது என்றால் தாய்ப்பால் ஊற்றுவது, நாமக்கட்டியை தேய்த்துப் பூசுவது கூடாது. கருவிழியில் தழும்பு ஏற்பட்டால் கண்மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பார்வை பெறச் செய்யலாம். கருவிழியை மட்டுமே மாற்றுவதுதான் கண் அறுவைச் சிகிச்சையாகும். கேரட் ஜுஸ், கீரை ஜுஸ் குடிப்பதால் பார்வைக்குறைபாடு சரியாகாது.
ஒருவயதுக் குழந்தை முதல் நோய் பாதித்தவர்கள் உள்பட எல்லோரும் கண்தானம் செய்யலாம். எய்ட்ஸ் மற்றும் தொற்று நோய் பாதித்தவர்களின் கண்கள் ஏற்கப்படுவதில்லை. கண்தானம் செய்வதில் தமிழகம் இந்திய அளவில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது.
கண்தானம் செய்ய விரும்பியவர் இறந்துவிட்டால் உடனே பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு இறந்தவரின் நெற்றியில் வைக்க வேண்டும். மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். மூடிய கண்களின் மீது ஈரமான துணி அல்லது பஞ்சை வைத்துவிட்டு மருத்துவர்களை அழைக்க வேண்டும்.
கணினியில் பணி செய்வதால் பார்வைக் குறைபாட்டுக்கு வழி இருக்கிறது. கணினி எழுத்துக்கள் பல புள்ளிகள் இணைந்து (பிக்செல்) உருவாகுபவை. இதனால் அடிக்கடி பார்வை விலகி குவிக்க வேண்டி இருப்பதால் பாதிப்புகள் ஏற்படும். இதனால் வலி உண்டாகும். இதை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். தொடர்ந்து பல மணி நேரம் ஓய்வில்லாமல் கணினியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். பணி செய்யும்போது சரியான தூரத்திலும், சரியான நிலையிலும் அமர்ந்து கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் நீண்டகாலமாக இருந்தால் அவர்களுக்கு கண் கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் கண் மருத்துவரையும் அவ்வப்போது அணுகுவது நல்லது. இவர்களின் கண் பாதிப்பை `23 ஜி விட்ரக்டமி' சிகிச்சை மூலம் சரி செய்ய லாம். அதிக ரத்த அழுத்த வியாதியும் கண்ணைப் பாதிக்கும். இதனால் கண்பார்வை போய்விடும் அபாயமும் இருக்கிறது. எனவே இந்த பாதிப்புள்ளவர்களும் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

No comments: