சில உணவுப்பொருட்களைப் பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதற்குக் காரணம் அவற்றின் மணமும், நிறமும்தான். நிறத்தைக் கொடுக்கும் பொருளை இயற்கையாகவும், செயற்கையாகவும் தயாரிக்கலாம்.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள பாலைவனங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் நிறத்தைக் கொடுக் கும் வண்டு, குளவி போன்ற பூச்சியினங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அந்தப் பூச்சிகளைப் பிடித்து நசுக்கிக் காயவைத்துப் பொடியாக்குவார்கள். அந்தப் பொடியோடு குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் கலந்து சிவப்பு நிறச் சாயத்தைத் தயாரிப்பார்கள். அந்தச் சாயத்தைத்தான் கேக் மற்றும் சில இனிப்பு வகை களில் சேர்த்து அவற்றுக்கு நிறம் கொடுக்கிறார்கள்.
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பூச்சிகளில் இருந்து ஒரு கிலோ சாயம் எடுக்கலாம்.
ஐரோப்பிய நாடுகள் இந்தச் சாயங்களை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுக் கொடிகளுக்கும், ராணுவத்தின் ஆடைக்கும் நிறம் கொடுக்கின்றன.
No comments:
Post a Comment