ஸ்டெம்செல் பேஷியல் |
சருமத்தில் இருக்கும் கெட்டுப்போன திசுக்களுக்கு சிகிச்சை கொடுத்து அவைகளுக்கு புது ஜீவன் கொடுப்பது, ஸ்டெம் செல் பேஷியல். சருமத்தில் புதிய செல்களை உருவாக்க வும் இந்த பேஷியல் துணைபுரியும்.
பெரும்பாலான பெண்கள் இப்போது சருமத்தில் கெட்டுப்போன செல்களுக்கு புது ஜீவன் கொடுக்க இந்த பேஷியலை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் சருமம் பொலிவுபெற்று முகம் அழகாக பளிச்சென மாறுகிறது. விரைவாக வேலை செய்து, உடனடியாக பலன் தரும் இந்த பேஷியலை செய்தால், முகத்தில் இருக்கும் புள்ளிகளும், கறுப்பு திட்டுகளும் மாறிவிடும். அதனால் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும். சருமம் பட்டுபோன்று மிருது தன்மை பெறும். இந்த பேஷியலில் ரசாயனம் கலந்த அழகுப் பொருட்கள் எதுவும் நேரடி யாக சருமத்தில்படாது. அதனால் எல்லாவித சருமத்திற்கும் இது பொருந்தும்.
பொதுவாக சருமத்திற்கு மூன்று விதங்களில் பாதிப்பு ஏற்படும். அவை: சூடு, வறட்சி, தூசு. இவைகள் மூலம் சரும திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பணியை ஸ்டெம் செல் பேஷியல் செய்கிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்று தடவை இந்த பேஷியலை செய்யும்போது முழு பலன் கிடைக்கும்.
எப்படி செய்யப்படுகிறது?
முக சருமத்தை சுத்தம் செய்துவிட்டு, `ஸ்பெஷல் வெஜிட்டபிள் பீல்'லை பூசவேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு விரல்களால் தேய்த்து அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் செயல்படாத திசுக்கள் சருமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. பின்பு ஸ்டெம்செல் நரிசிங் கிரீம் மூலம் மசாஜ் செய்யவேண்டும். இந்த கிரீமை யூத் ஆயிலில் சேர்த்து மசாஜ் செய்தால் சருமம் வேகமாக உட்கொள்ளும். கழுத்து, பின் முதுகு, கைகளிலும் இந்த மசாஜை செய்யலாம். 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவேண்டும்.
அடுத்து ஆரஞ்சு பழத்தின் தன்மையை சருமத்திற்கு தரும் கால்வானிக் சிகிச்சையை செய்யவேண்டும். இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். ரோஸ் வாட்டரில் முக்கிய பஞ்சு பேடை முகத்தில் வைத்து கூல் கம்ப்ரஷன் கொடுத்த பின்பு மாஸ்க் போடவேண்டும். ஸ்டெம் செல் மாஸ்க்கை முக சருமத்தில் நேரடியாக போட வேண்டும். 20 நிமிடத்தில் கழுவி அப்புறப்படுத்திவிட வேண்டும்.
No comments:
Post a Comment