செரிமானத்தைத் தூண்டும் பெருங்காயம்

நம்ம தமிழ்நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் `கமகமக்க' வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, `கடவுளர்களின் மருந்து'ன்னு குறிப்பிடுறாங்க. பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்ல தான் பெருங்காயச்செடி வளருது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காயவைச்சா, அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது. 
காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்துல செரிக்க வைக்கும். வாயுக்கோளாறை விரைவிலேயே சரிசெய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும்னு ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கு. தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா, வயிற்று வலி, வயிறு உப்புசமாக இருக்குறது போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

No comments: