இளமையில் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது இளநரை.
உணவுக் குறைபாடு, மரபுத் தன்மை, குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவது, மாசுபட்ட சுற்றுப்புறச் சூழல், அடிக்கடி ஷாம்பு போடுவது ஆகியவையே இளநரைக்கு அடிப்படை காரணம். இந்த காரணிகளை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருந்தால் இளநரையை தவிர்க்கலாம்.
அடுத்து இளமையில் முக்கியப் பிரச்சினையாக வருவது முகப்பருக்கள். முகத்தில் உள்ள எண்ணை சுரப்பி அதிகம் செயல்படுவதாலும் ஆன்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் தூண்டுதலும் காரணம் ஆகும். இளமைக்காலத்தில் இது அதிகம் சுரக்கும்.
தக்காளிக்கு குளிர்ச்சித் தன்மை இருப்பதால் முகப்பரு வராமல் தடுக்கும் தன்மை உள்ளது. உணவில் தக்காளியை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
இளமைக்காலத்தில் உலர்ந்த சருமத்தை உடையவர்கள், எண்ணைத் தன்மை உடைய சோப்பை பயன்படுத்த வேண்டும்.
எண்ணைத் தன்மை சருமத்தை உடையவர்கள், சாதாரண சோப்புகளை ஒருநாளைக்கு 4 அல்லது 5 முறை பயன்படுத்தி முகத்தை கழுவி பசை இல்லாமல் வைத்துக் கொள்ளவேண்டும்.
இளமையில் மற்றொரு பிரச்சினை... தேமல்.
உடம்பில் ஏற்படும் எல்லா வெண் புள்ளிகளுக்கும் பல காரணங்கள் உள்ளன. அதேபோல் தேமல் வந்தால் உடனே மருத்துவரை பார்த்து சோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. இதற்கு பாட்டி வைத்தியம் சரிவராது.
உடலில் எடை கூடினாலோ அல்லது காலுக்கு தகுந்த செருப்பு அணியாவிட்டாலோ அல்லது ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்தாலோ பித்த வெடிப்பு ஏற்படும். மேலும் உடலில் இரும்புச் சத்து குறைந்தாலும் பித்த வெடிப்பு ஏற்படும்.
தற்போது கோடை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை `அப்தாஸ் அல்சர்' எனப்படும் வாய்ப்புண் அடிக்கடி வர வாய்ப்புள்ளது. வைட்டமின் பி பற்றாகுறை, இரும்புச்சத்து குறைபாடு, குடல்புண் தொந்தரவு ஆகியவையே காரணம். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் மன அழுத்தம் காரணமாக வாய்ப்புண் ஏற்படும். உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொடர்ந்து வாய்ப்புண் இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.
No comments:
Post a Comment