Pages

நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்?


இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம். ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எந கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயது – ஒரு குழந்தைக்கு அல்லது இலவயதினருக்கு வருவதைவிட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்கண்டவாறு தெரிகிறது.

வயது (வருடங்களில்)பத்தாயிரம் பேரில் நீரிழிவு உள்ளவர்கள்
1 – 204
20 – 4010
30 – 60100
60 – 701000
1.எனக்கு டிவி மாடல்களைப் போல கழுத்து எலும்பு துருத்தி இருக்க ஆசையாக இருக்கிறது. என்ன செய்வது?
உங்கள் மார்புகள் பகுதியில் இருக்கும் எலும்பையும், கழுத்து எலும்புகளையும் கொழுப்பு இல்லாமல் இணைக்க வைத்தால் மாடல்களைப் போல உங்கள் காலர் போன கழுத்து எலும்பு துருத்திக் கொண்டு வரும். இதற்காக நீங்கள் மார்பின் மேற்பகுதிக்கான எக்ஸ்சைஸ்களில் நிறைய கவனம் எடுத்துச் செல்ல வேண்டும். புஷ்பைல், செஸ்ட், ஃபிளைஸ் ட்ரஸ்ஸஸ் போன்ற பயிற்சிகளை அவசியம் செய்யுங்கள். உடலில் கொழுப்பு குறைவதில் உணவின் பங்கு அதிகம், கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். ஓடுவது, ஸ்கிப்பிங், பவர் வாக்ஸ் போன்ற பயிற்சிகளில் உடலில் கலோரி குறையும். ஒரு வேளை மிஷின்களைப் பயன்படுத்த விரும்பினால் எஸிப்டிகள், ஸ்டெப்பர், க்ராஸ், ட்ரெய்அர் போன்ற பயிற்சிகளை செய்தால் உடலில் நிறைய கொழுப்பு குறையும். இதுதவிர நீங்கள் எப்பொழுதிலும் உங்கள் BMI –ஐ 18.5 லிருந்து 24.9 வரை மெயிண்டன் செய்வது நல்லது. உணவுப் பழக்கம் மிக மிக முக்கியமானது. சாப்பிடாமல் கிடந்து மெலிவதை தவிர்த்து விடுங்கள்.
ஆரோக்கியமாக திட்டமிட்டு நகர்ந்தால், எப்போதுமே மாடல் போல அழகாக இருக்கலாம்.
2. எனக்கு ஸ்லீவ்லெஸ் போட ஆசையாக இருக்கிறது. ஆனால் எனது மேல் கைகள் தளர்ந்து தொங்குகிறது. அதை சிக்கென்றாக்க வழி உண்டா?
என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். இந்த உலகில் இன்றைக்கு எல்லாக் கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. என்ன அதைத் தெரிந்து கொண்டு நாம் செயல்படுத்துவதில் தான் வெற்றி இருக்கிறது. மேற்கை சிக்கென்று இருக்க வேண்டுமானால் நீங்கள் பைசெப்ஸ், டிரைசெப்ஸ், தோள் பகுதிக்கான தசைகளை இறுக்கமாக்க வேண்டும். நீங்கள் ஜிம் பக்கமே போனது இல்லை என்றால், பைசெப்ஸ்கர்ள், ஹேமர்கர்ள் ஆகிய இரண்டையும், மெதுவான எடையுடன் செய்து பழகுவது நல்லது. கையின் பின் பகுதிக்கு புஷ் டௌன், டிப்ஸ், எக்ஸ்டென்ஷன் வொர்க்ஸ் உதவும். ஜிம் போரடிக்கும் என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் பாக்ஸிங், க்ளாங் கூட போகலாம். அதில் இருக்கிற பஞ்ச்சிங், ஜேப்ஸ், கிராஸ் பஞ்ச்சிங் போன்றவை மேற்கை மெலிதாக இருக்கவும், இறுக்கமாகவும் உதவும். இல்லை இதுவும் சரியாக வராது என்று நினைத்தால் நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம். நீந்துவதாலும் மேற்கை இறுக்கமும் அழகும் பெறும்.
இது எதுவுமே முடியாது என்று நினைத்தால் உங்கள் ஸ்லீவ்லெஸ் அழகாக இருக்காது என்று நினைக்கத் தொடங்குகள். இதற்கு நீங்கள் சிரமப்பட தேவையில்லை.
3. எனக்கு காஜல் போடாமல் இருக்க முடியவில்லை. போட்டால் சற்று நேரத்திற்கெல்லாம் உருகி கலைந்து விழுந்து அசிங்கமாக ஆகிவிடுகிறது. என்ன செய்வது?
கவலைப்படாதீர்கள். இதற்கு வழி இருக்கிறது. காஜல் போட்டு முடிந்தவுடன், சிறிதளவு பவுடர் ஜஷேடோ போடுங்கள். இது கடைகளில் கிடைக்கும் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதைப் போடுவதால் காஜலில் இருக்கிற எண்ணெய் பசை உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் நீங்கள் சொல்கிற பிரச்சனை உங்களுக்கு ஏற்படாது. காஜலும் நீண்ட நேரம் அழகு குறையாமல் நிற்கும். இதுதவிர ‘ப்ளாக் ட்ராக் ஜெல் ஐ லைனர்’ கிடைக்கிறது. இதையும் கண்களின் உள் வளையத்தில் போடலாம். இதுவும் காஜலைப் பாதுகாக்கும்.
4. எனது மூக்கில் நான் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இது கடந்த ஐந்து வருடங்களில் நடந்தது. எனது கண்களுக்கு அருகில் இருக்கும் மூக்கின் பகுதி ஒரு பக்கமாக சாய்வது அல்லது வளைவது போல இருக்கிறது என்ன செய்வது?
நீங்கள் உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன், பின் படங்களுடன் ஒரு நல்ல அழகு சிகிச்சை மருத்துவரைச் சந்திப்பது நல்லது. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் எலும்புகள் எசிம்மட்ரி என்கிற நிலை இருக்கலாம். இதை உறுதி செய்ய CAT ஸ்கேன் தேவைப்படும். பாராநேசல் சைனஸ் இருக்கலாம். அல்லது எலும்புகள் இணைப்பு, செப்டம் ஒருபக்கமாக போன்ற நிலைகள் இருக்கலாம், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

No comments: