வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, நோய் எதிர்பபு சக்தி அதிகமாக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது தகவல்.
வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது.
பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நோய்ககிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.
No comments:
Post a Comment