தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அவர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டனர். தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.
தேவர்களின் முறையீட்டை ஏற்ற சிவபெருமான், தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான ஆண் குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அந்த குழந்தைகள் வளர்க்கப்பட்டு, பின்னர் ஆறு முகங்களுடன் கூடிய முருகப்பெருமான் உருவானார்.
அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு,
அவர் அசுரர்களை அழித்து வர பார்வதிதேவி தனது சக்தி அனைத்தையும் கொண்டு உருவாக்கிய ஞான வேலை வழங்கினார். அந்த வேலை பார்வதி வழங்கிய நாள் ஓர் தைப்பூச நாளே!
இந்த சம்பவம் நிகழ்ந்தது பழனி திருத்தலத்தில் என்பதால், தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் அங்கு வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தாயார் பார்வதிதேவி தந்த வேலினை ஆயுதமாகக் கொண்டே, தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அசுரர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலை
வாயிலில் வதம் செய்து, தேவர்களைக் காத்தார் முருகப்பெருமான்.
No comments:
Post a Comment