Pages

உள்ளம் உறவு உலகம்!

பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல ; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக் ö காண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும் புலம்புகிறார்கள். கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும் ஒரே உறவு, இந்தப்பெற்றோர் - பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும் முயற்சி மிகவும் அவசியம் அல்லவா!

* தலைமுறை இடைவெளி என்பது என்ன? புரிந்துகொள்ளுதலில் இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள் இடையே மட்டும்தான் வருகிறதா? இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப் பாலம் அமைப்பது எப்படி?
தலைமுறை இடைவெளி என்பது, கருத்துப் பரிமாற்றத்திலும், புரிந்துகொள்ளுதலிலும் இருக்கக் கூடிய இடைவெளி. அது பொதுவாக, இளையவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே இருப்பதாகக் கருதப்படுகிறது.எண்ணப்போக்கிலும், இலட்சியங்களை நோக்கிச் செல்வதிலும் இந்த இடைவெளி தோன்றுகிறது.
இந்த இடைவெளியை அதிகப்படுத்துவதில் பெரியவர், சிறியவர் என்ற இரு பக்கத்தினருக்குமே பங்கிருக்கிறது. ஆர்வம், சாதிக்கும் வெறி. துணிச்சல் எல்லாம் இளம்தலைமுறையினருக்கு அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், அனுபவமும், ஞானமும் பெரியவர்களுக்கு அதிகம் என்பதையும் மறுக்க முடியாது. ஆக, இரு வெவ்வேறு பலங்கள் கொண்ட இரு சாராருமே இணைந்து செயல்பட்டால் அதிக நன்மை உண்டு.
இருவருமே ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு, நல்லவற்றை மற்றவர்களிடமிருந்து கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். விரிசலுக்குக் காரணம் சொல்லாமல், பாலம் அமைக்க வழிகள் கண்டுபிடிப்பது தான் சரியான வழி.
* வாழ்க்கையில் பல விஷயங்களை அனுபவம்தான் நமக்குக்  கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் போல் சிறந்த ஆசான் இல்லை. அதே நேரத்தில், பிள்ளைகளுக்க நல்லவை தீயவற்றைப் புரிய வைத்து நல்வழிப்படுத்தும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது. பெற்றோர்கள் எவற்றை அனுபவம் என்னும் ஆசானிடம் விடுவது? எவற்றை தங்கள் அறிவுரையின் மூலம் திருத்த முனைவது?
எப்போது பெற்றோர் தலையிடவேண்டும், எப்போது தலையிடக் கூடாது என்று எழுதி வைத்த நியதி கிடையாது. மூளையும் மனதும் இணைந்து செயல்படுதல் மிக அவசியம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆண் பெண் என்ற இரு சக்திகளும் ஒருங்கிணையும் போது, ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்பது தானாகப் புரிந்துவிடும்.
ஒவ்வொரு அனுபவமும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். ஒரு அனுபவத்தில் பலியாகாமல் அதிலிருந்து கிடைக்கும் பாடத்தை கற்கும் மனோபாவம் வேண்டும். பெரியவர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முயலும் போது, தவறைச் சுட்டிக்காட்ட முனையாமல், சரியானவற்றை உணர்த்த முயல வேண்டும். அறிவுரை என்பது பெரும்பாலானோர் செய்வது போல் குத்திக் காட்டுவதாய் இல்லாமல், உங்கள் கோணத்தை எடுத்துக்காட்டுவதாய் மட்டும் இருக்க வேண்டும்.
அதோடு, நீங்கள் அறிவுரை கூறும் போது, அவர்கள் அதைக் கேட்டும் மனநிலையில் இருக்கிறார்களா என்பதையும் பாருங்கள். கேட்கும் நிலையில் இல்லையென்றால் நீங்கள் சொல்லும்  எதையுமே அவர்கள் உள்வாங்கிக் கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, வார்த்தைகளால் கிடைக்கும் உணருதலை விட, நம் உள்நோக்கமும் நாம் வாழும் முறையும் தரும் உணருதல் மிகுந்த சக்திவாய்ந்தது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள்.
* குழந்தைகளோடு பழகும்போது பெற்றோர் அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருப்பது சரியா அல்லது ஒழுக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு சற்றுக் கடுமையாக நடந்து கொள்வது சரியா? பெற்றோர் எப்போதுமே அவர்கள் நலம் விரும்பிகள் என்பதை எப்படிப் புரிய வைப்பது/
நல்ல நண்பர்களைப் போல் இருக்கும் அதே நேரத்தில், நியாயமாகவும் வெளிப்படையாகவும், விட்டுக்கொடுத்தும் இருப்பது அவசியம். நிறைய இளைஞர்கள் ஒழுக்கம் என்பது சுதந்திரத்தைப் பறிக்கும் விஷயமென்று நினைக்கிறார்க ள். அந்தப் போக்கு மாற வேண்டும். ஒழுக்கம் சுதந்திரத்தைச் செம்மைப்படுத்தும். நதிக்கு கரை போல, சுதந்திரத்துக்கு ஒழுக்கமாகும்.
குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு கல்விமுறை. அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் சொன்னவுடனே அவர்கள் புரிந்துகொண்டு  கேட்பார்கள் என்று இருந்து விடாதீர்கள். குழந்தைகளின் மனதை ஆட்கொள்ளும் பெற்றோர்களாய் நம்மை வளர்த்துக் கொள்வது ஒரு கலை. அதில் தேர்த்தி பெற காலம் ஆகும்.
உலகம் நன்மை, தீமை இரண்டையுமே தரக்கூடியது. நல்ல பெற்றோருக்கு, நல்லவற்றை எடுத்துக் கொள்ளவும் தீயவற்றை ஒதுக்கவும் கற்றுத் தரும் பொறுப்பு இருக்கிறது. அதோடு, எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளின் நலம் தெரிந்து நடப்பவர்கள் என்று சொல்ல முடியாது. குறிக்கோள் நல்லதாகவே இருந்தாலும், நடைமுறையில் முட்டாள்தனமாக நடந்து கொண்டால் அது பிள்ளைகளுக்கு அதிக துன்பத்தை விளைவிக்கும். உதாரணத்துக்கு, ஜாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளினால் தங்கள் குழந்தைகளுக்குப் பிரிவினையைத்தான் சொல்லிதருகிறார்கள். இத்தகைய பிரிவினைகளால் பிரச்னைகளும் வலியும் உண்டாகின்றன. ஆகவே, பெற்றோரின் உள்நோக்கம் பிள்ளைகளின் நலம் என்கிறபோதிலும், தங்கள் மனதை முதலில் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியம்.
* வயதானவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் மீண்டும் ஒருமுறை குழந்தைகளாக மாறிவிடுவதாகவே தோன்றகிறது. யதார்த்தத்தில், சில நேரங்களில் பிள்ளைகளைப் போல கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் சில நேரங்களில் பெரியவர்களைப் போல அவர்கள் போக்கில் விட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதை எப்படி அணுகுவது?
அன்பிற்கு இருக்கும் சக்தி கடவுளை ஒத்தது. அன்பின் சக்தியை உணர்ந்து நடக்கும்போது, வயதானவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது புரிந்துவிடும். அவர்களோடு உறவாடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். முதிர்ச்சி öன்ற பருவத்தை அடையும் அதே நேரத்தில், குழந்தை போல் ஆகிறோம் என்பது அவர்களுக்கும் குழப்பத்தை உண்டாக்கும் விஷயம். அதைப் புரிந்து பரிவோடு நடந்து கொள்ள முயன்றீர்களானால், அவர்களுக்கு உதவ முடியும். ஆத்மார்த்தமான முயற்சி செய்து உங்களால் இயன்றவரை அன்பைக் கொடுக்கும்போது, கிடைக்கும் பலனும் அதிகம். உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பது போல் அவர்களுக்கு செல்லம் கொடுப்பதில் என்ன தவறு? அவர்களுக்கு அது இரண்டாவது குழந்தைப் பருவம் அல்லவா?
வயதில் சிறியவர்கள்தான் அதிகம் அனுசரித்துப் போகவேண்டும். பெரியவர்களும் அனுசரித்துப் போகும் நிலையில் மிகவும் நல்லது. அப்படி இல்லாத நிலையில், அவர்களுக்குத் தேவையானதை எதிர்ப்பார்ப்பின்றி கொடுக்கும் போது, உங்கள் வாழ்க்கைத் தரம் மேலோங்கும். அறிவுப்பூர்வமாக நிறைய யோசிக்காமல் அன்பைப் பொழியப்பழகுங்க ள்.
* பெற்றோரைத் தவிர மற்றவர் பேச்சைக் கேட்கும் தன்மை எல்லா வயதினருக்கும் இருக்கிறது. ஒரு  விஷயத்தைப் பெற்றோர் சொல்லும் போது "முடியாது' என்று மறுத்து வாக்குவாதம் செய்யும் ஒருவர், அதே விஷயத்தை நண்பரோ வேறொருவரோ சொல்லும்போது ஏற்கிறார்கள். இந்த பாரபட்சம் ஏன் வருகிறது?
அருகாமை, மனத்தில் அலட்சியத்தைத் தோற்றுவிக்கிறது.பெற்றவர்கள் எப்படி இருந்தாலும் தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் அவர்கள் சொல்வதைக் கேட்காததற்குக் காரணமாகிறது. பெற்றோரின்  அருகாமை மற்றும் அன்பின் மதிப்பு புரியாமல் போய்விடுகிறது. மற்றவர் விஷயத்தில் இது அரிதாகிறது. சிறு வயதிலிருந்தே எதையுமே அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்ற உணரல் மிகவும் அவசியம்.நம்  ஆரோக்கியம், பணம், அந்தஸ்து எதையுமே துச்சமாக நினைக்கக்கூடாது. இயற்கை தரும் பரிசுகளை நன்றியுணர்ச்சியோடு மெச்சும் மனம் அவசியம். பெற்றோர்களைப் பெறுவதும் அப்படிப்பட்ட பாக்கியம்தான். பெற்றோரின் அன்பு கிடைக்காத குழந்தைகள் எதையெல்லாம் அனுபவிக்கத் தவறியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள். வாழ்க்கையின் ஸ்திரமின்மையை உணர்ந்து இவற்றை மதிக்க வேண்டும். இந்த உணருதலை பெற்றோர், குழந்தைகளுக்குச் சாதுர்யமாக கற்றுத் தரவேண்டும்.

No comments: