சாக்லெட் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. ஆம். சாக்லெட் சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
சாக்லெட் உடல் நலனுக்கு நல்லது என ஏற்கனவே பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதயத்துக்கு நல்லது என சில ஆய்வாளர்களும்,மன அழுத்த்த்தைக் குறைக்கும் என மற்றும் சில ஆய்வாளர்களும் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைப்பதில் சாக்லெட்டின் பங்கு குறித்த ஒரு ஆய்வு நடைபெற்றது. 215 பேரிடம் 8 விதமான ஆய்வு நடைபெற்றது. பின்னர் அனைத்தையும் ஆராய்ந்ததில் சாக்லெட் சாப்பிட்டவர்களின் ரத்த்த்தில் இருந்த கொழுப்புச் சத்தின் அளவு கணிசமாக குறைந்திருந்த்து.
மேலும், 260 மி.கி.பாலிபெனல் உள்ள சாக்லெட்டை குறைவான அளவில் சாப்பிட்டவர்களுக்கு கொழுப்புச் சத்து குறைந்து காணப்பட்ட நிலையில், அதிக அளவில் சாப்பிட்டவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. பாலிபெனல் என்ற ஆன்டிக் ஆகிஸிடன்ட் சாக்லெட் மட்டுமல்லாது பழங்கள், காய்கறிகள் மற்றும் ரெட் ஒய்னிலும் காணப்படுகிறது. 1.25 அவுன்ஸ் மில்க சாக்லெட்டில் 300 மி.கி.பாலிபெனல் உள்ளது. உடல் ஆரோக்க்யமாக உள்ளவர்கள் சாக்லெட் சாப்பிட்டாலும் கொழுப்பின் அளவு குறையாது என்பதும் தெரிய வந்தது.
அதே சமயம் நீரழிவு, இதய நோய் உள்ளவர்கள் சாக்லெட் சாப்பிட்டால் அவர்களின் ரத்த்த்தில் உள்ள கொழுப்புச் சத்து குறைவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. பொதுவாக, சாகலெட்டை சீரான அளவில் சாப்பிடுவதன் மூலம் அதிக கொழுப்பு சேராது என்கிறது ஆய்வு முடிவு.
No comments:
Post a Comment