* கடவுளிடம் எப்போதும் ""இறைவா! மனஅமைதி கொடு!'' என்று வேண்டிக் கொண்டால் போதும். இப்பிரார்த்தனையே நியாயமானதும் சுகமானதும் ஆகும்.
* நல்ல நூல்களைப் படிப்பதும், நல்லவர்களிடம் பழகுவதும், கடவுளிடத்தில் முழுநம்பிக்கை கொள்வதும் ஒவ்வொருவரும் வாழ்வில் பின்பற்றவேண்டியவை.
* தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிக் கொண்டே போகாதீர்கள். மனம் விட்டுப் பழகுங்கள். ஒற்றுமை உணர்வு மலர உதவுங்கள்.
* நாக்கைச் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறக்கும். ருசி, பேச்சு இரண்டுக்காகவும் நாக்கு பயன்படுகிறது. இதைச் சரியாகப் பயன்படுத்துபவன் வாழ்வில் முன்னேற்றம் காண்பான்.
* எந்தப் பொறுப்பையும் ஏற்பதற்குமுன் அதற்குரிய தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் அந்த பொறுப்பை திறம்பட நம்மால் நிர்வகிக்க முடியாது.
*செய்யப்போவதையே சொல்லுங்கள். சொன்னவண்ணம் செயல்படுங்கள். அன்பின் வழி நடந்து கொள்ளுங்கள். முயற்சியும் அன்பும் இணைவது தான் சேவை. மக்கள் சேவை செய்பவன் கடவுளான மகேசனுக்கே சேவை செய்தவனாவான்.
* புத்தக அறிவு மட்டும் ஒருவனுக்குப் போதாது. எதையும் அனுபவத்தின் மூலமாக உணரும்போது தான்
ஒருவனின் அறிவு பலப்படுகிறது.
No comments:
Post a Comment