தினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்


சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்படி தலைவலியால் அவதிப்படுபவர்களை டாக்டர் அடிக்கடி நிறைய தண்ணீர் குடிக்குமாறு ஆலோசனை கூறுவார். ஏன் தெரியுமா? நமது உடலில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனே ஏற்படுவது தலைவலிதான்! தினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்.
`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஒளி பட்ட தண்ணீர்தான்' என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர்.
இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.
`சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும்,
நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை உடம்பில் உள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன. சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன' என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர்.
சீனாவில் மூலிகைப் பொடிகளைக் கலந்து மூலிகை குளியல் முறையினால் பல நோய்களை குணப்படுத்துகிறார்கள். அதேபோல் பவுத்த மதம், த மதம், இஸ்லாமிய மதங்களிலும் குளிப்பதும் ஒரு சமயச் சடங்காகவே செய்யப்படுகிறது.
உடலைச் சுத்தப்படுத்துவது குளிப்பதன் மூலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் மூலம் நடைபெறுகிறது. பல நாடுகளில் வெந்நீர் ஊற்றுகள் இயற்கையாகவே பூமியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ரோமாபுரியில், குளிப்பதை மிகவும் முக்கியமான ஒரு சடங்காகவே வைத்திருந்தார்கள். அவர்கள் அதிகமாக சூரிய ஒளி பட்ட தண்ணீரில்தான் குளித்ததாக வரலாறு கூறுகிறது.

No comments: