ஆஞ்சநேயரின் இரட்டைக் காட்சி

எந்த கோவிலிலும் ஒரே சன்னதியில் ஒரு தெய்வம் இரட்டையராக காட்சியளிப்பது இல்லை. ஆனால், ஒரு ஊரில் ஆஞ்சநேயர் இரட்டை ஆஞ்சநேயராக காட்சியளிக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் காவிரி நதிக் கரையோரம் அமைந்துள்ள மேல்பாதிதான் அந்த ஊர்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஓடும் காவிரி ஆற்றின் அக்கரைக்கு செல்ல இரு மனித குரங்குகள் மனிதர்களுக்கு உதவின. அங்கே பாலம் கட்டி முடித்ததும், அந்த இரண்டு குரங்குகளும் அங்கிருந்த இழுப்பை காட்டு திடலில் ஓய்வெடுத்தன. அப்போது, அந்த இடத்திலேயே ஐக்கிய மாகிவிட்டன. அந்த இடத்தில் எழுப்பப்பட்டதுதான் இந்த இரட்டை ஆஞ்சநேயர் கோவில்.

இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் எப்பேற்பட்ட இன்னலும் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.    ஆஞ்சநேயரை வழிபடும் முறைகள்...
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
ஆஞ்சநேயரின் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்; துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி ஆராதிக்க வேண்டும்.
ஆஞ்சநேயரின் வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர் மோர், கதலிப்பழம், கடலை போன்ற நிவேதனப் பொருட்களை படைப்பது சிறப்பு.
ராமநவமி விழா கொண்டாடும் இடங்களுக்கு எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து பக்தர்களுக்குள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசிப்பார், அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்குவார் என்பது ஐதீகம்.

No comments: