படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!

இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, "பம்ப்' செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், "ஹார்ட் பெய்லியர்' என்கிறோம்.
"ஹார்ட் பெய்லியர்' என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம். இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, "சிஸ்டாலிக் பெய்லியர், சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன்' (LVSD  Left Ventricular Systolic Dysfunction)  என்றழைக்கப்படுகிறது. இதய கீழறை விரிவடைவதில் குறைபாடு, "டயஸ்டாலிக் பெய்லியர், டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன் '(LVDD  Left Ventricular Diastolic Dysfunction)  எனப்படுகிறது. இது பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை வரலாம்.

இதை புரிந்து கொண்டால் ஹார்ட் பெய்லியரின் ஆதிமூலமே இதுதான் என்பது புலப்படும். எந்தெந்த வியாதிகள், எந்த நேரத்தில் இந்த பாதிப்பை தட்டி எழுப்பும் என்பதும் தெரியாது.
அமெரிக்க இதய கழகம் வகுத்துள்ள, "ஹார்ட் பெய்லியர்' வகைகள்:
* எந்த அறிகுறியும் தெரியாதது.
* ஓய்வின் போது எந்தவித கோளாறு இருக்காது. அன்றாட வேலை செய்யும் போது, சில மணி நேரம் கழித்து சோர்வு படபடப்பு, அதிக நேரம் செயலாற்ற முடியாத நிலை, மூச்சு இரைப்பு, படபடப்பு.
* ஓய்வின் போது எந்தவித கோளாறும் கிடையாது. சிறு வேலை செய்யும் போதே, அதிகமான சோர்வு, படபடப்பு, மூச்சு இரைப்பு.
* ஓய்வின் போதே மூச்சிரைப்பு, படபடப்பு, சோர்வு.
முதல் இரண்டு வகையினர், நோய் குறித்தே தெரியாமல் இருப்பதால், டாக்டரிடம் வர மாட்டர். சோர்வு, படபடப்பு, மூச்சிரைப்பு என்றால் மிகவும் தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டும். முதல் இரண்டு வகைகளை, எளிதில் குணப்படுத்தி கட்டுப்பாட்டில் வைக்கலாம். கடைசி இரண்டு வகைகளை, ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
ஏனெனில், எளிதில் மரணம் ஏற்படலாம். இதை முதியவர்கள் உணர வேண்டும்.
ஹார்ட் பெய்லியரும், நீண்ட கால வாழ்வும்: "ஹார்ட் பெய்லியர்' யாருக்கு எந்த நேரத்தில் வருகிறது, எதனால் வருகிறது என்று கூறுவதற்கில்லை.
ரத்தக் கொதிப்பு என்று கண்டுபிடித்தால், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
ரத்தக் கொதிப்பால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டால், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் ஹார்ட் பெய்லியர், மாரடைப்பு உட்பட கோளாறுகளை தடுக்கலாம்.
மாரடைப்பு ஏற்பட்டால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை, மருந்து ஊசிகள் மூலமும், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சை மூலமும், பை-பாஸ் சர்ஜரி மூலமும் நீக்கி, இதய தசைகளின் தாக்கத்தை தடுத்து விடலாம். இதுபோல வால்வு நோய்<களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், நீண்ட காலமாக வாழலாம். இதய தசைகளை காப்பாற்றினால், நீண்ட காலம் வாழலாம்.
நீண்டகால வாழ்வை பற்றிய   பிரிட்டன் ஆய்வுகள் கூறுவதாவது:
* ஆண் 71 வயது; பெண் வயது 77.
* 2005 ஆண்டு ஆய்வுப்படி, 65 வயதானவர்கள் 82 வயது வரை வாழலாம் என்றும், பெண்கள் 85 வயது வரை வாழலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிலை உருவாகும்பட்சத்தில், 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தொகை மூன்று மடங்காகும் என்கிறது ஆய்வு. அமெரிக்காவில் 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் தொகை, 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயரும் என்று ஆய்வு கூறுகிறது. வாழ்வு வயது அதிகரிக்க காரணம், வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ கண்டுபிடிப்புகளும், கருவிகளும், விலை உயர்ந்த மருந்துகளும் தான்.

No comments: