அரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும்

தலையை பிய்த்து கொள்ள வைக்கும் டென்ஷனான நேரங்களில் கொஞ்சம் சர்க்கரை சாப்பிட்டால் டென்ஷன் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஒஹியோ மாநில ஆராய்ச்சியாளர்கள்.மன உளைச்சல் அதிகம் ஏற்படும் போது உடல், மனம் மட்டுமின்றி மூளையும் களைப்படைகிறது. இதனால் வேறு எந்த வேலையைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து உடனடியாக வெளிவர உடனடி மருந்து சர்க்கரை தானாம். இந்த ஆராய்ச்சிக்காக அதிகப்படியான டென்ஷன் பாதிப்புக்குள்ளான சுமார் 2000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர்.
இவர்களை 2 பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினருக்கு மன உளைச்சல் அதிகமாகும் போது சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த தண்ணீரை கொடுத்தனர். இன்னொரு பிரிவினருக்கு இது கொடுக்கப்படவில்லை. இதில் சர்க்கரை கொடுக்கப்பட்டவர்கள், உடனடியாக தங்கள் கவலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், டென்ஷனை குறைக்கும் எளிய வழியை கண்டுபிடிக்க ப்ரட் புஷ்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியாகி உள்ள தகவல் தான் இது. இது குறித்து ப்ரட் புஷ்மன் தெரிவித்தவை:
டென்ஷன் பாதிப்பில் இருக்கும் போது நிம்மதியின்றி இருப்போம். தூக்கம் வருவதும் கடினம். மருந்து மாத்திரைகளும் உடனடி பலன் தராது. அத்தகைய சமயங்களில் சர்க்கரை நிச்சயம் கை கொடுக்கும். அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும். டென்ஷன் உடனடியாக மறைந்து விடும். சர்க்கரை ரத்தத்துடன் கலந்து குளுகோசாக மாறி மூளைக்கு செல்கிறது. குளுகோஸ் கிடைத்தவுடன் மூளை வலுவாக செயல்பட்டு சுறுசுறுப்பாகிறது.

1 comment:

சக்தி கல்வி மையம் said...

சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்!
சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன்....

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...