மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?



மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்
.
‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம்.
தேவையான போது இ‌தி‌ல் ஒரு உரு‌ண்டையை க‌ற்பூரவ‌ல்‌லி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ள்ள கொடு‌க்க குழ‌ந்தைகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ச‌ளி‌த் தொ‌ல்லை தீரு‌ம். ஈளை ம‌ற்று‌ம் இரும‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் கற‌ந்த பசு‌ம்பாலை கா‌ய்‌ச்‌சி, அ‌தி‌ல் ‌‌சி‌றி‌து ‌மிளகையு‌ம், ம‌ஞ்சளையு‌ம் பொடியா‌க்‌கி கல‌ந்து குடி‌த்து வர 3 நா‌ளி‌ல் குண‌ம் ‌கி‌ட்டு‌ம்

No comments: