புற்றுநோய்க்குத் தீர்வாகும் பவளப் பாறைகள்!

கடலடிப் பகுதி ஒரு வினோதமான உலகம். குறைந்த ஆழம் கொண்ட கடலடிப் பகுதிகள் வண்ணக் களேபரமாகத் திகழும். அந்த கடலடியில் இருந்து மனிதர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் லார்டு ஹோவ் தீவுப் பகுதியில் உள்ள ஆழம் குறைவான கடல் சரணாலயத்தில் மிகவும் அரிதான ஒருவகை ஒளிரும் பவளப் பாறைகள் காணப்படுகின்றன.    அந்த பவளப் பாறைகளின் நிறமிகளைக் கொண்டு ஒரு புதிய ஒளிரும் முத்திரைகளை உருவாக்க முடியும்.
அந்த ண்ணிய முத்திரைகளை செல்களின் உட்புறம் செலுத்தும்போது அவற்றின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று அறிய முடியும். புற்றுநோய் விஷயத்தில் எது தவறாகிப் போகிறது என்று அறியலாம் என்று மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் அன்யா சாலி கூறுகிறார்.
புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் அன்யா, திசுக்களை ஆழமாக ஆராய குறிப்பிட்ட பவளப் பாறை உதவுவதால், அதற்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்றும் கூறுகிறார்.
பவளப் பாறைக்கு நிறத்தைக் கொடுக்கும் ஜீன், செல்லில் வைக்கப்படும்போது அதன் மூலக்கூறுடன் ஒட்டிக் கொண்டு ஒளிர்கிறது.
அந்த செல் வளரும்போதும், மாறும்போதும் குறிப்பிட்ட மூலக்கூறின் செயல்பாடும் மாறுகிறது. தொடர்ந்து அது ஒளிர்ந்து கொண்டிருப்பதால், ஒரு சிறப்பு லேசர் ண்ணோக்கி மூலம் அதைக் கண்காணிக்க முடியும். எனவே புற்றுநோய் தொடர்பான ணுக்கமான ஆராய்ச்சியில் இந்தப் பவளப் பாறை முக்கியப் பங்கு வகிக்கும், இந்நோய்க்குத் தீர்வு காணவும் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், உலக வெப்பமயமாதலுக்கு ஏற்ப இந்தப் பவளப் பாறைகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. அந்த விஷயத்திலும் மனிதர்களுக்கு இப்பவளப் பாறைகள் உதவக்கூடும் என்று கருதப்படுகிறது.
WordPress.com

No comments: