திருநீறு உணர்த்தும் தத்துவம்

இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்' என்பது திருவாசகத்தின் வாக்கு.
பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன.
நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால், நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே இருக்கும். எந்த மாற்றமும் அடையாது.
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம். கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும். அந்த கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்துவிடும்.
அதேபோல், பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் நம்முள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அணிகிறோம்.

No comments: