ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
மகத்துவ மாவிலை!
கோவில் சம்பந்தப்பட்ட எந்த விழாவை எடுத்துக்கொண்டாலும் சில பொருள்களுக்கு தனி முக்கியத்துவம் தரப்படும். மஞ்சள், குங்குமம், விபூதி, மஞ்சள் தூள் கலந்த அரிசி, தர்ப்பைப் புல், மாவிலை போன்றவைதான் அந்த பொருட்கள். எல்லா சுபகாரியங்களிலும் இவற்றிற்கு தனி இடம் உண்டு.
இவைதவிர, விழா நடைபெறும் இடத்தில் பந்தலிலும், முகப்பிலும் குருத்தோலைத் தோரணங்கள் இடம்பெறும். வீட்டின் முகப்பில் மாவிலைத் தோரணம் இடம்பெற்றிருக்கும். இதைக்கட்ட நேரமில்லாவிட்டாலும், ஒரு கொத்து இலையாவது செருகி வைத்திருப்பார்கள்.
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலை னியால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை. இது ஏன் தெரியுமா?
மாவிலையின் னியில் லட்சுமி தேவி வசிக்கிறாள். அதனால்தான் அதிகம் முற்றாததும், னி உள்ளதுமான இலையை பயன்படுத்துவார்கள். மாவிலைக்கு இன்னொரு சக்தியும் உண்டு. மரம், செடி, கொடிகள் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன. மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறான். மாசுபடும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துபவை மரம், செடி, கொடிகள்.
இவற்றில் மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.
இதை பிளாஸ்டிக் அலங்கார பொருளாக பயன்படுத்தாமல், உண்மையான இலைகளை பயன்படுத்துவதே நல்லது.
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment