ஒரு உடல் இரு உயிர்-கர்ப்பகாலம்

ஒரு உடலில் இரு உயிர்கள் வசிக் கும் காலம் கர்ப்பகாலம். அதனால் அந்தக் காலத்தில் பாதுகாப்பு, பராமரிப்பிலும் இரட்டிப்பு கவனிப்பு தேவை. கர்ப்பகாலத்தில் சரியாக தூங்குவது பல்வேறு நன்மைகளைத் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தூக்கத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்...
கர்ப்ப காலத்தில் பெண்கள் சராசரியாக 7 மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ தூங்கினால் ரத்த அழுத்தம் உயர வாய்ப்பிருக்கிறது. மொத்தம் 1,272 கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தினமும் 7 மணி நேரத்திற்கு குறைவாக
 தூங்கிய பெண்களிடம் சிஸ்டோலிக் என்னும் இதயம் சுருங்குதல் தொடர்பான பாதிப்புகள் காணப்படுகிறது. 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் கர்ப்பிணிகளுக்கு ரத்தப்போக்குடன் கூடிய உயர் ரத்த அழுத்த வியாதியான `பிரிகிளம்சியா' நோய் தாக்க 10 மடங்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆரோக்கியமான டயட் கடைபிடித்து, தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வரும் கர்ப்பிணிகள் சரியாக 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்தது. அப்படி இருப்பவர்களுக்கு பிரசவம் ஆரோக்கியமாக நடைபெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதேபோல் கர்ப்பிணி பெண்கள் காலையில் அடிக்கடி வாந்தி எடுப்பது மற்றும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வது நல்லது என்று தெரியவந்துள்ளது. இது கர்ப்பம் கலைவது அல்லது முன்கூட்டியே குழந்தை பிறப்பது போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும். 25 வயதுக்கு முன்பு அல்லது 35 வயதுக்கு மேல் கர்ப்பம் அடையும் பெண்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறத்தல் அல்லது கரு கலைதல் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

No comments: