வாசகப் பெருமக்களுக்கு வணக்கம் . இப்பொழுது குருபெயர்ச்சி பலன்கள் என்ற விஷயம் தமிழ் கூறும் நல்லுலகில் பேசப்பட்டு எழுதப்பட்டு வாசித்துப் பலன் அறியப்பட்டு வருகிறது . ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள குருபெயர்ச்சி என்பது குருபெயர்ச்சி அல்ல . அவர் ஏற்கனவே மீனா ராசியில் சஞ்சாரம் செய்து வரும் பொழுது வக்ர கதி ( பின்னோக்கி செல்வது ) ஆகி கும்ப ராசிக்கு வந்து இதுகாறும் சஞ்சாரம் செய்து
பின் அவர் மறுபடியும் நேர்கதிக்கு அதாவது மீன ராசிக்கு 5-12-2010 பின் இரவு 1:53 மணிக்கு செல்கிறார் . எனவே அதை பெயர்ச்சியாக கருதி ஜோதிட உலகில் பேசவும் பலன் எழுதவும் முற்பட்டதால் நாமும் நமது வாசக பெருமக்களுக்கு " குருபெயர்ச்சி பலன்களை " கூற விழைந்தோம் . இந்த பெயர்ச்சியின் பலன்கள் 5 மாதங்கள் மட்டுமே ஆகும் .அதன் பின் 8-5-2011 அன்று அவர் மேஷ ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார் . எனவே அவர் மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் இந்த 5 மாதங்களுக்கு என்ன பலன்களை ஒவ்வொரு லக்ன தாரர்களுக்கு தர இருக்கிறார் என்பதை தங்களுக்கு மிக விரிவாக கொடுத்துள்ளோம் . இதில் கூறப்பட்டுள்ள நற்பலன் மற்றும் கெடு பலன்கள் இரண்டும் பொதுவானது ஆகும் . அவரவரின் சொந்த ஜாதகத்திற்கு ஏற்ப இப்பலன்களின் தன்மை கூடும் அல்லது குறையும் . எனவே வாசகர்கள் தங்களின் தனிப்பட்ட ஜாதகத்தின் பலன் படிதான் நல்லது கெட்டது நடக்கும் என்பதை உணவீர்களாக ! இருப்பினும் "குரு" ஆனவர் சுபகிரகம் ஆவார் . அவரது பார்வைக்கு பலன் உண்டு .என ஜோதிட சாஸ்திரத்தின் நம் மகரிஷிகள் உரைத்துள்ளனர் . அவர்களின் ஆசியுடனும் குருபகவானின் அனுகிரகதுடனும் அவர் பார்த்த மற்றும் அமர்ந்த இடத்தின் பலன்களையும் காலசூழ்நிலைகளுகேற்ப உங்களுக்கு தந்து இருக்கின்றோம் .
நாம் எப்பொழுதும் ராசியை வைத்துப் பலன் கூறுவதில்லை .உங்கள் ஜாதகப்படி உங்கள் லக்னம் எதுவோ அதன் அடிப்படையிலேயே உங்களுக்கு பலன்கள் அமையும் . ஆம் லக்னம் என்பது உயிர். ராசி என்பது உடல். உயிர் இல்லாமல் இந்த உடல் இயங்காது . எனவே நாம் பூமியில் பிறந்த புள்ளியே லக்னம் ஆகும் . எனவே அதன் அடிப்படையிலேயே உங்களுக்குப் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன .
மேலும் குருவானவர் பூரட்டாதி , உத்தரட்டாதி ,ரேவதி இந்த மூன்று நட்ச்சத்திரங்களின் வழியாக சஞ்சாரம் செய்ய இருக்கிறார் . இந்த நட்ச்சத்திரம் மூலம் அவர் சஞ்சாரம் செய்யும் பொழுது அவர் 12 லக்னகாரர்களுக்கும் என்னவிதமான பலன்களை அளிக்க உள்ளார் என்பதை விரிவாக உங்களுக்கு விளக்கியுள்ளோம் .
பொதுவாக குருபெயர்ச்சிக்கு "ஆலங்குடி" சென்று அர்ச்சனை , "திருச்செந்தூர் சென்று கடல்நீராடி " அர்ச்சனை மற்றும் "குறிவித்துரை குருபகவானுக்கு " அர்ச்சனை சென்று பொதுவாக பரிகாரம் கூறினாலும் அவரவர் லக்னப்படி என்னமாதிரியான பரிகாரம் என்பதைக் குறிப்பிட்டுள்ளோம் . அதன்படி செயல்பட கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் கூடும் . மேலும் "குரு" மட்டுமே நம் ஜாதகத்தை இயக்குவதோடல்லாமல் மற்றும் உள்ள 8 கிரகங்களும் நம் ஜாதகத்தை இயக்குவதால் எதற்கும் கவலைபடாமல் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து நம் கடமையைச் செய்து வர சகல நலன்களும் நமக்குக் கிடைக்க நவகிரகங்களும் துணை நிற்கும் . எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் வாழ குருபகவான் அருள் புரிவாராக !
No comments:
Post a Comment